பிக்பாஸ் 2வது சீசனில் ஒரு போட்டியாளர்களில் ஒருவர் மஹத். நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
இப்போது கூட ஒரு நடன நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கிறார். மஹத், பிராசி என்ற மாடலை காதலித்து வருகிறார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இந்த நிலையில் திருமணத்திற்கு ஒரு நாள் இருக்கும் நிலையில் அவர் தனது காதலிக்கு மன நெகிழ ஒரு நீண்ட பதிவு போட்டுள்ளார்.
நான் உன்னுடன் ஒவ்வொரு நாளையும் மகிழ்வுடன் கழித்தேன். வருங்காலம் எப்படி இருக்கும் என்பதை காண ஆவலாக இருக்கிறேன். நமக்கு வருங்காலம் சிறப்பாக இருக்கும் என்று தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார்.