இந்தியில் வெளியான ராக் ஸ்டார் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்தவர் நடிகை நர்கிஸ் பக்ரி. இவர் மெட்ராஸ் கபே, மைன் தேரா ரோ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் பிரசாந்த் நடிக்கும் சாகசம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.
அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் ‘ஸ்பே’ என்ற ஆங்கில படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், கடந்த ஒரு மாதமாக ஒவ்வாமை காரணமாக சில உணவுகளை தவிர்த்தேன். மேலும் அதிக அளவில் நடைபயிற்சி மேற்கொண்டேன். இதன் பயனாக நான் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 4 கிலோ வரை எடையை குறைத்துள்ளேன். இது மிகவும் அதிசயத்தக்க விஷயமாகும். என்று கூறியுள்ளார்.