விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர், இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
தற்போது விஜய்யின் அனைத்து ரசிகர்களும் காத்து கொண்டு இருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் இசை வௌியீட்டு விழாதான்.
இப்படத்தின் இருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளிவந்திருந்தது. விஜய்யின் சொந்த குரலில் பாடி ஒரு குட்டி ஸ்டோரி எனும் பாடல் மற்றும் வாத்தி கம்மிங் என்ற பாடல் வெளிவந்திருந்தது.
இதனை தொடர்ந்து ரசிகர்களை கொண்டாட வைக்கும் விதமாக இப்படத்தில் இருந்து வாத்தி ரைட் எனும் மூன்றாம் சிங்கிள் வெளிவந்திருந்தது.
இந்த லிரிகள் வீடியோ பாடலில் ஒரு புகைப்படம் ஒன்று வருகிறது. இதில் வாங்கன வணக்கங்கனா இது வாத்தி ரைடுனா என்று ஒரு வரி இருக்கிறது.
இந்த வரியை குறித்து சமீபத்தில் விஜய் வீட்டில் நடத்த முடிந்த வருமான வரி துறையினரை பற்றி தான் கூறுகிறார்களா என்று சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.