தொழிலதிபர் அஸ்வின் பிலிப்பை விரைவில் மணமுடிக்கவுள்ளார் நடிகை மியா ஜார்ஜ்.
மலையாள நடிகையான மியா ஜார்ஜ் – அமர காவியம், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து போன்ற பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தொழிலதிபர் அஸ்வின் பிலிப்பை விரைவில் மணமுடிக்கவுள்ளார் மியா ஜார்ஜ். 23 வயது மியா அஸ்வின் பிலிப் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். கோட்டயத்தைச் சேர்ந்த அஸ்வின், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உள்ளார். செப்டம்பர் அல்லது டிசம்பரில் மியா ஜார்ஜின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.