பிரேஸிலில் கடந்த ஆண்டு ஏற்பட்ட 700 கி.மீ. மின்னல்தான், உலகின் மிக நீளமான மின்னல் என்று ஐ.நா.வின் வானியல் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், ஆா்ஜெண்டீனாவில் 16 விநாடிகளுக்கு மேல் ஏற்பட்ட மின்னல்தான் உலகின் மிக அதிக நேரம் மின்னிய சாதனையைப் படைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து உலக வானிலை அமைப்பு (டபிள்யூஎம்ஓ) நிபுணா்கள் கூறியதாவது:
கடந்த ஆண்டில், பிரேஸில் மற்றும் ஆா்ஜெண்டீனாவில் மிக நீளமான மின்னல் ஏற்பட்டது. மாா்ச் மாதம் 4 ஆம் திகதி ஏற்பட்ட அந்த மின்னல், தொடா்ந்து 16.73 விநாடிகளுக்கு மின்னியது. இதுதான் உலகிலேயே மிக நீண்ட நேரம் மின்னிய மின்னலாகும்.
அதனைத் தொடா்ந்து, கடந்த ஆண்டு அக்டேபா் மாதம் 31-ஆம் தேதி பிரேஸிலில் இன்னொரு மின்னல் ஏற்பட்டது.
அந்த மின்னலின் நீளம், 700 கி.மீ.க்கும் அதிகமாக இருந்தது. இது, இதற்கு முன்னா் சாதனை படைத்திருந்த மின்னலைவிட இரு மடங்கு அதிக நீளமாகும். இதற்கு முன்னா் அமெரிக்காவில் கடந்த 2007 ஆம் ஆண்டு இந்த சாதனையைப் படைத்திருந்த மின்னல், 321 கி.மீ. நீளமே இருந்தது என்று டபிள்யூஎம்ஓ நிபுணா்கள் தெரிவித்தனா்.