திரிஷாவும், நயன்தாராவும் தமிழ் திரை உலகில் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருக்கிறார்கள். என்றாலும் இருவரும் நல்ல தோழிகளாகவே பழகி வருகிறார்கள்.
திரிஷா நடிக்கும் ‘நாயகி’ படத்தின் பூஜையின்போது அளித்த பேட்டியில் எனக்கும் நயன்தாராவுக்கும் எந்த போட்டியும் இல்லை என்று கூறி இருந்தார் திரிஷா.
இப்போது ‘நாயகி’ படத்தில் கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் வேடத்தில் நடிக்கும் திரிஷாவுக்கு போனில் நயன்தாரா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் இருவரும் உண்மையான தோழிகள் என்பது உறுதியாகி உள்ளது.