பாலிவுட் நடிகர் இம்ரான் கான் படம் என்றால் முத்தக் காட்சி இல்லை என்றால்தான் அதிசயம். அவர் நடிக்கும் படங்களில் கதை கூட இல்லாமல் இருக்கலாம் ஆனால் முத்தக் காட்சி கண்டிப்பாக இருக்கும்.
அந்த வரிசையில் தற்போது அவர் நடித்து வரும் கட்டி பட்டி(katti batti) என்கிற ஹிந்திப் படத்திலும் முத்தக் காட்சியில் கலக்கியுள்ளாராம். இதில் கங்கனா ரனாவத் ஜோடியாக நடித்து வருகிறார் .
இந்தப் படத்தின் பாடலுக்கு உதட்டு முத்த காட்சி தேவைப்பட்டது. இயக்குனர் கேட்டுக்கொண்டதின் பெயரில் லிப் டூ லிப் கிஸியான் என்ற பாடலின்போது கங்கனா ரனாவத் -இம்ரான் கான் முத்த காட்சி தினமும் 8 மணி நேரம் என மூன்று நாட்கள் படமாக்கப்பட்டது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த பாடல் காட்சியில் தினமும் 8 மணி நேரம் என 24 நேரம் முத்தம் கொடுத்து நடித்துள்ளனர். இதற்க்கு முன் இந்தியாவில் எந்த படத்திலும் வெளிவராத முத்தகாட்சியாக இந்த பாடல் காட்சி இருக்கும் என இயக்குனர் நிகில் அத்வானி தெரிவித்துள்ளார்.
மேலும் பாலிவுட்டில் முதல் முறையாக ஸ்டாப்மோஷன் டெக்னாலஜியில் லிப் டூ லிப் கிஸியான் என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது என இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 18 ம் தேதி இந்த படம் வெளியாகிறது என இயக்குனர் கூறினார்.