டொமினியன் படத்தின் வெளியீடு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1993 இல் வெளிவந்த ஜூராசிக் பார்க் படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கினார். இதையடுத்து இதுவரை ஜூராசிக் பட வரிசையில் ஐந்து படங்கள் வெளியாகியுள்ளன. கடைசியாக 2018 இல் ஜூராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் படம் வெளியானது.
ஜூராசிக் வேர்ல்ட்: டொமினியன் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் திட்டமிட்டபடி அடுத்த வருடத்துக்குப் பதிலாக 2022 ஆம் வருடம் ஜூன் 10 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு அடுத்த வருடம் ஜூன் 11 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் புதிய வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. காலின் டிரேவோர்ரோ இயக்கியுள்ளார். ஜூராசிக் வேர்ல்ட்: ஃபாலன் கிங்டம் படத்தின் அடுத்த பாகம் இது.