கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் இதுவரை தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 1090 இலட்சமாக உயர்ந்துள்ளது.
சற்று முன்னர் வரையான நிலவரப்படி, உலகளவில் 38,361,293 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 28,846,863 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 1,090,811 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது 8,423,619 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 69,977 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 8,090,253 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 220,873 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொற்று பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு இதுவரை 110,617 பேர் உயிரிழந்துள்ளனர், மூன்றாம் இடத்தில் பிரேசிலும், நான்காம் இடத்தில் ரஷ்யாவும் உள்ளது.