விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது.
ரம்யா பாண்டியன், ஆஜித், ஆரி, அனிதா சம்பத், வேல் முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சோம், ஷிவானி, சனம் ஷெட்டி, பாலா, கேப்ரியலா, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, ரேகா, ரியோ, சம்யுக்தா என 16 பேர் பங்கேற்கிறார்கள். பிக் பாஸில் இந்த வாரம் முதல் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறவுள்ளார்கள்.
இந்த வாரம் ரம்யா பாண்டியன், ஆஜித், கேப்ரியல்லா, ரேகா, சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன் என ஏழு பேரில் ஒருவர் வெளியேறவுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு விருப்பமான போட்டியாளர் தொடரவேண்டும் என்றால் (அல்லது உங்களுக்குப் பிடிக்காத போட்டியாளர் வெளியேற வேண்டுமென்றாலும்) ஹாட்ஸ்டார் செயலியில் லாக் இன் செய்து பிக் பாஸ் தமிழ் பக்கத்துக்குச் சென்று வோட் நவ் என்பதை கிளிக் செய்து வாக்களிக்க வேண்டும்.
ஒருவர் 50 முறை வாக்களிக்கலாம் என பிக் பாஸ் தரப்பு கூறியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகாத பிக் பாஸ் பார்க்காத காட்சிகள், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் செவ்வாய் முதல் சனிக்கிழமை வரை வெளியிடப்படுகின்றன.
இந்த லிங்கை கிளிக் செய்து இதுவரை பிக் பாஸ்ஸில் காணாத காட்சிகளை காணவும்.
https://www.hotstar.com/in/tv/bigg-boss/14455/list/unseen-on-tv-by-ace2three/t-3835