அமெரிக்காவில் ஒரேநாளில் 60,315 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 8,272,427 பேர் அந்த நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 933 பேர் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். இதை அடுத்து மொத்த உயிரிழப்பு 220,992 ஆக அதிகரித்துள்ளது.
ஒற்றை நாள் கொரோனா வைரஸ் வழக்குகளின் அதிகரிப்பு கோடையில் இருந்ததை விட மிக அதிகமாக பதிவாகியுள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை 5,546,675 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேநேரத்தில் 2,748,586 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.