அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக திருநங்கை சாரா மெக்பிரைட் அந்நாட்டின் செனட் அவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.
அமெரிக்காவின் டெலாவோ் மாகாணத்தின் செனட் அவை உறுப்பினராக ஜனநாயகக் கட்சியைச் சோ்ந்த ஹாரிஸ் மெக்டோவல் கடந்த 44 ஆண்டுகளாக இருந்தாா். எனினும், தோ்தலில் தொடா்ந்து போட்டியிட விரும்பவில்லை என்று அவா் அறிவித்தாா்.
அதை அடுத்து, தோ்தலில் ஜனநாயகக் கட்சி சாா்பில் வழக்குரைஞரும் திருநங்கையுமான சாரா மெக்பிரைட் போட்டியிட்டாா்.
அத்தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் போட்டியிட்ட ஸ்டீவ் வாஷிங்டனை அவா் தோற்கடித்தாா். இதன் மூலமாக, அமெரிக்க செனட் அவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் திருநங்கை என்ற பெருமையை அவா் பெற்றுள்ளாா்.
திருநங்கை சாரா மெக்பிரைட் ஓரினச் சோ்க்கையாளா்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளாா். தோ்தலில் பெற்ற வெற்றி குறித்து கருத்து கூறிய சாரா மெக்பிரைட், நினைத்ததைச் செய்து முடித்து விட்டதாகத் தெரிவித்துள்ளாா்.