டொனால்ட் டிரம்ப், இந்த தேர்தலில் 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இருக்கிறார். அமெரிக்க வரலாற்றிலேயே, ஒட்டுமொத்தமாக இத்தனை அதிக வாக்குகளைப் பெறும் இரண்டாவது தலைவர் டிரம்ப் தான்.
அமெரிக்காவில் 47 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்ற டிரம்ப், தனக்கு விருப்பமான ஃபுளோரிடா, டெக்சாஸ் உள்பட 24 மாகாணங்களில் வென்று இருப்பதாகத் தெரிகிறது. எது எப்படியோ, டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு விட்டார்.
மீண்டும் இரண்டாவது முறை அமெரிக்க அதிபர் பதவியைப் பெறாத, நவீன காலத்து அமெரிக்க அதிபர்கள் பட்டியலில் ஒருவராக இணைந்து இருக்கிறார்.