அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் பரபர வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். இந்நிலையில், டைம் பத்திரிகையில் டிரம்ப் கேலி சித்திரம் இடம்பெற்று இருந்ததாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேலி சித்திரத்தில் டிரம்ப் இருள் சூழ்ந்த அறையில் இருந்து வெளியேறுவது போன்ற படம் மற்றும் நேரம் வந்துவிட்டதை குறிக்கும் வார்த்தைகள் இடம்பெற்று இருக்கின்றன.
வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில், டைம் பத்திரிகையில் இடம்பெற்றதாக கூறும் அட்டைப்படம் போலியானது என தெரியவந்துள்ளது. மேலும் டைம் பத்திரிகை வலைதளத்தில் அச்சிடப்பட்ட அட்டைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
அந்த வகையில் டைம் பத்திரிகை வலைதளத்தில் வைரலாகும் சர்ச்சையான டிரம்ப் கேலி சித்திரம் இடம்பெறவில்லை. மேலும் வைரல் படத்தில் வழக்கமாக டைம் பத்திரிகையில் இடம்பெறும் தேதி தவறாக இடம்பெற்று இருந்தது.
இவற்றை வைத்து பார்க்கும் போது, டைம் பத்திரிகையில் இடம்பெற்றதாக கூறி வைரலாகும் கேலி சித்திரத்தை டைம் பத்திரிகை வெளியிடவில்லை என உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.