பிரபல ராப் இசைக் கலைஞனும், ரியாலிட்டி தொலைக்காட்சி நட்சத்திரமான கிம் கர்டாஷியானின் கணவனுமான கான்யே வெஸ்ட், 2020ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
எம் டிவி விருதுகள் விழாவில், வாழ்நாள் சாதனையாளர் விருதை வாங்கிய வெஸ்ட், ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக எந்த அளவுக்கு உணர்ந்து சொன்னார் என்பது தெரியவில்லை.
வேண்டியதையெல்லாம் மேடையில் கூச்சப்படாமல் பேசக்கூடியவரான கான்யே வெஸ்ட், உலகின் மிகப் பெரிய ராக் ஸ்டார் நானே என்று அண்மையில் அறிவித்தார்.
ஒருவேளை கான்யேவெஸ்ட் ஜனாதிபதியானால், உலகின் அதிக செல்வாக்குமிக்க தொலைக்காட்சி நட்சத்திரமாக விளங்கும் கிம் கர்டாஷியான் “ஃபர்ஸ்ட் லேடி”யாகவும் ஆவார்.