பன்னாட்டு நிறுவனத்தின் உணவு விடுதியில் வேலை பார்க்கும் பெண் ஒருவர் ஜன்னல் வழியாக தூக்கி வீசப்பட்ட வீடியோ ஒன்று அயல் நாட்டு ஊடகங்களில் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காரில் செல்பவர்கள் உணவருந்தும் ட்ரைவ்-த்ரூ விடுதி ஒன்றில், வாடிக்கையாளர் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த அப்பாவி பெண் ஊழியர் வெளியே தூக்கி வீசப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் நடந்த திகதி உள்ளிட்ட துல்லியமான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.