பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
70 வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார் ரஜினி. பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி எனப் பலரும் ரஜினிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்கள்.
இந்நிலையில், ட்விட்டரில் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது: பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவா. கடவுளுக்கு உங்களுக்கு நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வழங்கட்டும் என்று கூறியுள்ளார்.