3 முறை தேசிய விருது பெற்ற பிரபல கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி சென்னையில் காலமானார்.
பிரபல கலை இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி(77). பூம்புகாரில் பிறந்த இவர், வானவில், பாண்டவர் பூமி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, சங்கமம், அழகி பசும்பொன் உள்ளிட்ட படங்களுக்கு செட் அமைத்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது மலையாளம் மற்றும் கன்னடம் படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.
மேலும் தேசிய விருதுகள், கலைமாமணி விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இவர் வென்றிருக்கிறார். இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு காலமானார்.
இதையடுத்து அவரின் இறுதிச்சடங்குகள் இன்று பிற்பகல் 12 மணிக்கு மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது. பி.கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.