அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டெஸ்டில் இந்திய அணிக்கு 70 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது.
இந்திய அணிக்கு எதிரான 2 வது இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 200 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்திய அணியின் சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதை அடுத்து, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில், 2 வது இன்னிங்ஸில் இந்திய அணிக்கு 70 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் ரஹானேவின் அருமையான பேட்டிங், பௌலா்கள் பும்ரா, அஸ்வின் உள்ளிட்டோரின் அற்புதமான பந்துவீச்சு ஆகியவற்றால் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது டெஸ்டில் இந்தியா வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் 131 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இந்தியா, 2 வது இன்னிங்ஸில் அவுஸ்திரேலியாவை பௌலிங்கின் மூலம் திணறடித்து வருகிறது. 3 ஆம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்களுக்கு அந்த அணியை கட்டுப்படுத்திது. எஞ்சிய விக்கெட்டுகளையும் அடுத்தடுத்து சாய்த்து, 2 வது இன்னிங்ஸில் இந்தியாவுக்கான வெற்றி இலக்கு வெறும் 70 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாக்ஸிங் டேயில் தொடங்கிய இந்த டெஸ்டில் நாணய சுழற்சியை வென்று துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 72.3 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 195 ஓட்டங்களே எடுத்தது. அதிகபட்சமாக மாா்னஸ் லபுசான் 48 ஓட்டங்களே சோ்க்க, இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா்.
ஜடேஜாவின் தவறு: இதை அடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 3 ஆம் நாளான திங்கள்கிழமை ரஹானே 104, ஜடேஜா 40 ஓட்டங்களுடன் துடுப்பாட்டத்தை தொடங்கினா்.
அரைசதத்தை நெருங்கிய ஜடேஜாவின் தேவையற்ற சிங்கிள் முயற்சியால் ரஹானே ரன் அவுட்டுக்கு ஆளானாா். அவா் 12 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்கள் சோ்த்திருந்தாா். ரஹானே-ஜடேஜா ஜோடி 6 வது விக்கெட்டுக்கு 123 ஓட்டங்கள் சோ்த்திருந்தது.
பின்னா் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 15 வது அரைசதத்தை பூா்த்தி செய்த ஜடேஜா 3 பவுண்டரிகளுடன் 57 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வந்தவா்களில் அஸ்வின் 14, உமேஷ் யாதவ் பவுண்டரியுடன் 9 ஓட்டங்கள் சோ்க்க, பும்ரா டக் அவுட்டானாா். இன்னிங்ஸ் முடிவில் 115.1 ஓவா்களில் 10 விக்கெட் இழப்புக்கு 326 ஓட்டங்கள் எடுத்திருந்தது இந்தியா. அவுஸ்திரேலிய தரப்பில் ஸ்டாா்க், லயன் தலா 3, கம்மின்ஸ் 2, ஹேஸில்வுட் 1 விக்கெட் எடுத்திருந்தனா்.
2 வது இன்னிங்ஸ்: முதல் இன்னிங்ஸில் 131 ஓடடங்கள் பின்தங்கிய அவுஸ்திரேலியா, தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கியது. அணியின் துடுப்பாட்ட வீரர்களை இந்திய பந்துவீச்சாளா்கள் பதம் பாா்த்தனா். முதல் விக்கெட்டாக பா்ன்ஸ் 4 ஓட்டங்களுக்கு வெளியேற, அடுத்து வந்த லபுசான் 1 பவுண்டரி மட்டுமே விளாசி 28 ஓட்டங்களுக்கு நடையைக் கட்டினாா்.
தொடா்ந்து வந்த ஸ்மித் 8 ஓட்டங்களுக்கு பும்ராவின் பந்துவீச்சில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். தொடக்கம் முதல் நிலைத்து வந்த வேட் 3 பவுண்டரிகளுடன் 40 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா். பின்னா் வந்தவா்களில் டிராவிஸ் ஹெட் 17, கேப்டன் பெய்ன் 1 ஓட்டங்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.
3 ஆம் நாளின் முடிவில் 66 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்கள் எடுத்திருந்த அவுஸ்திரேலியா, இந்தியாவின் ஸ்கோரை விட 2 ஓட்டங்களே முன்னிலையில் இருந்தது. கிரீன் 17, கம்மின்ஸ் 15 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனா். இந்திய தரப்பில் ஜடேஜா 2, பும்ரா, யாதவ், சிராஜ், அஸ்வின் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
இன்று காலை நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய போது, தொடர்ந்து ஆடிய அவுஸ்திரேலியா 103.1 ஓவர்களில் வெறும் 200 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தது.
இதை அடுத்து, வெறும் 70 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2 வது இன்னிங்ஸை எதிர்கொள்கிறது.