ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் தரவரிசையில் உலகின் நெ. 1 டெஸ்ட் துடுப்பாட்ட வீரராக கேன் வில்லியம்சன் முன்னேறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் நியூஸிலாந்து 101 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் 129 ஓட்டங்கள் குவித்தார்.
இதை அடுத்து ஐசிசி வெளியிட்டுள்ள புதிய தரவரிசைப் பட்டியலில் கேன் வில்லியம்சன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
விராட் கோலி 2 ம் இடத்திலும் ஸ்டீவ் ஸ்மித் 3 ம் இடத்திலும் உள்ளார்கள். 4,5 ம் இடங்களை லபுசானே, பாபர் அஸாம் பெற்றுள்ளார்கள்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும் சகல துறை ஆட்டக்காரர் பட்டியலில் பென் ஸ்டோக்ஸ் முதல் இடத்திலும் உள்ளார்கள்.