லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு வெளியான படம் மாஸ்டர்.
கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால், ரசிகர்களை கடந்து திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
ஜனவரி 13-ந் தேதி வெளியான இப்படம் வசூலில் பல்வேறு சாதனை படைத்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வாரத்திலேயே 100 கோடி வசூலை கடந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் உலகளவில் 200 கோடி வசூலை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் படம் வசூலில் சாதனை படைத்து வருவது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.