கடந்த 1999ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘முதல்வன்’ திரைப்படத்தில் வரும் ‘ஒருநாள் முதல்வர்’ என்ற காட்சி சிருஷ்டி கோஸ்வாமி மூலம் இன்று நிஜமாகி இருக்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்வராகி உள்ள சிருஷ்டி, அடல் ஆயுஷ்மான் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டம், உத்தராகண்ட் மாநில சுற்றுலா துறையின் ஹோம் ஸ்டே திட்டம் போன்ற திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளார்.