இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 2-1 என வெற்றி பெற்றது.
இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகின்றன. அதேவேளையில் அவுஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்கா – அவுஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்தத் தொடர் அவுஸ்திரேலியாவுக்கு முக்கியமானதாக கருதப்பட்ட நிலையில் ஒத்திவைப்பு அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.