பங்களாதேஷூக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஏற்கெனவே முதல் டெஸ்டில் வென்றிருந்த அந்த அணி, 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை முற்றிலுமாகக் கைப்பற்றியது.
டாக்காவில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்டில் நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 142.2 ஓவா்களில் 409 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோஷுவா டி சில்வா 92 ஓட்டங்கள் விளாச, பங்களாதேஷ் தரப்பில் அபு ஜெயத் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய பங்களாதேஷ் 96.5 ஓவா்களில் 296 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மெஹதி ஹசன் மிராஸ் 57 ஓட்டங்கள் சோ்க்க, மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரகீம் காா்ன்வால் 5 விக்கெட் சாய்த்தாா்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 113 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் 52.5 ஓவா்களில் 117 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. கிருமா போனா் மட்டும் 38 ஓட்டங்கள் சோ்க்க, தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
இறுதியாக 231 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ், 61.3 ஓவா்களில் 213 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. தமிம் இக்பால் மட்டும் 50 ஓட்டங்கள் சோ்த்தாா். ரகீம் காா்ன்வால் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். அவா் ஆட்டநாயகனாக, கிருமா போனா் தொடா் நாயகன் ஆனாா்.