இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். இவர் கடைசியாக, 2013-ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன்பின் அவர் அணியில் இடம்பெறவில்லை.
கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்ட இவர், தற்போது லண்டன் நடிகை ஒருவருடன் டேட்டிங் சென்றதாக தகவல் பரவியுள்ளது.
அந்த நடிகை பெயர் ஹசல் கீச் (28) என்று சொல்லப்படுகிறது. இவர் ஹிந்தியில் வசூலை வாரிக் குவித்த பாடிகார்டு படத்தில் நடித்துள்ளார். அத்துடன் அவர் பில்லா படத்திலும் நடித்துள்ளார். இருவரும் லண்டனில் ஒன்றாக இணைந்து சுற்றியுள்ளதாகவும், இந்தியாவிற்கு ஒன்றாக சேர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
சுசுகி விளம்பரத்தில் நடித்துள்ள ஹசல் கீச்சுடன் யுவராஜ் சிங் ஜாலியாக சுற்றியது உண்மையெனில், விராட் கோலி- அனுஷ்கா சர்மா நட்சத்திர ஜோடியுடன் இந்த ஜோடியும் இணையும்.
யுவராஜ் சிங் ஏற்கனவே தீபிகா படுகோனேவுடன் இணைத்து பேசப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.