தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை லிங்குசாமி அடுத்ததாக இயக்கவுள்ளார்.
ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான், சண்டகோழி 2 ஆகிய படங்களை இயக்கியவர் லிங்குசாமி.
சண்டக்கோழி 2 படத்தை 2018-ல் இயக்கிய லிங்குசாமி அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார்.
தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை லிங்குசாமி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2006 முதல் தெலுங்குப் படங்களில் ராம் பொத்தினேனி நடித்து வருகிறார். தயாரிப்பு – ஸ்ரீனிவாசா சிட்டூரி.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.