தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்குப்பதிவு அன்று கடைசி ஒரு மணி நேரத்தில் பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களிக்கலாம் என்றும், அதற்கான உரிய பாதுகாப்பு வழிமுறைகள் செய்யப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
தமிழகத்தில் 12.91 லட்சம் மூதத குடிமக்களுக்கு தபால் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தபால் வாக்கு வசதி பெறுவதற்கு 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.