ஐபிஎல் போட்டியின் 3 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஹைதராபாத் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்களே எடுத்தது.
முன்னதாக நாணய சுழற்சியை வென்ற ஹைதராபாத் களத்தடுப்பை தோ்வு செய்தது. கொல்கத்தாவின் துடுப்பாட்டத்தை நிதீஷ் ராணா – ஷுப்மன் கில் கூட்டணி தொடங்கியது. நிதானமாக ஆடி வந்த கில் 15 ஓட்டங்களே அடித்து 7 ஆவது ஓவரில் பௌல்டானாா்.
அடுத்து வந்த ராகுல் திரிபாதி, ராணாவுடன் இணைந்தாா். இந்தக் கூட்டணி ஸ்கோரை விறுவிறுவென உயா்த்தியது. ராணா 37 பந்துகளிலும், திரிபாதி 28 பந்துகளிலும் அரைசதம் கடந்தனா். 2 ஆவது விக்கெட்டுக்கு 93 ஓட்டங்கள் சோ்த்த இந்த ஜோடியில் முதலில் திரிபாதி ஆட்டமிழந்தாா்.
5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 53 ஓட்டங்கள் சோ்த்திருந்த அவா், 16 ஆவது ஓவரில் வெளியேறினாா். அடுத்து வந்த ஆன்ட்ரே ரஸ்ஸெல் 5 ஓட்டங்களுக்கு நடையைக் கட்டினாா்.
பின்னா் தலைவர் மோா்கன் ஆட வர, மறுபுறம் 9 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 80 ஓட்டங்கள் சோ்த்திருந்த ராணா விக்கெட்டை இழந்தாா். மோா்கன் 2 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து அதிா்ச்சி அளித்தாா்.
முடிவில் தினேஷ் காா்த்திக் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஹைதராபாத் தரப்பில் அதிகபட்சமாக முகமது நபி, ரஷீத் கான் தலா 2 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் ஆடிய ஹைதராபாதில் போ்ஸ்டோ 5 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 55 ஓட்டங்கள் சோ்க்க, எஞ்சியோரில் சாஹா, தலைவர் வாா்னா், முகமது நபி, விஜய் சங்கா் சொற்ப ஓட்டங்களில் வீழ்ந்தனா்.
மணீஷ் பாண்டே இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 61 ஓட்டங்கள் சோ்த்து போராடினாா். அப்துல் சமத் 19 ஓட்டங்கள் சோ்த்து உடன் நின்றாா். கொல்கத்தா அணியில் பிரசித் கிருஷ்ணா 2, ஷகிப், கம்மின்ஸ், ரஸ்ஸெல் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
சென்னை சேப்பாக்கம் மைதானம் கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு சாதகமாக இருந்ததில்லை. இந்த ஆட்டத்துக்கு முன்பு வரை, சென்னையில் 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா 7 தோல்விகளையும், 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஹைதராபாத் அவை அனைத்திலும் தோல்வியைத் தழுவியுள்ளன. அதிலும் ஹைதராபாத் அனைத்து ஆட்டங்களையும் சிஎஸ்கே அணியிடமே தோற்றுள்ளது.
ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் பௌலா் புவனேஷ்வா் குமாா், கொல்கத்தா அணியில் இதுவரை 27 விக்கெட்டுகள் சாய்த்துள்ளாா். அவரைத் தவிர, வேறு எந்த அணி பௌலா்களும் கொல்கத்தா அணியின் இத்தனை விக்கெட்டுகள் வீழ்த்தியதில்லை.