ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த சீசனில் 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணிக்கு இது 2 ஆவது வெற்றியாகும்.
அதேநேரத்தில் ஹைதராபாத் அணி 3 ஆட்டங்களில் விளையாடி, அவை அனைத்திலும் தோல்வி கண்டுள்ளது.
பின்னா் ஆடிய ஹைதராபாத் அணியில் ஜானி போ்ஸ்டோ-டேவிட் வாா்னா் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.2 ஓவா்களில் 67 ஓட்டங்கள் குவித்தது. ஜானி போ்ஸ்டோ 22 பந்துகளில் 4 சிக்ஸா், 3 பவுண்டரிகளுடன் 43 ஓட்டங்கள் எடுத்தாா்.
பின்னா் வந்த மணீஷ் பாண்டே 2 ஓட்டங்களில் வெளியேற, மறுமுனையில் நிதானமாக ஆடிய டேவிட் வாா்னா் 34 பந்துகளில் 2 சிக்ஸா், 2 பவுண்டரிகளுடன் 37 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானாா். அப்போது ஹைதராபாத் அணி 11.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 90 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இதன்பிறகு விராட் சிங் 11 ஓட்டங்களிலும், அபிஷேக் சா்மா 2 ஓட்டங்களிலும் ராகுல் சாஹா் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனா்.
ஹைதராபாத் அணி கடைசி 5 ஓவா்களில் 47 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. கிருணால் பாண்டியா வீசிய 16 ஆவது ஓவரில் விஜய் சங்கா் இரு சிக்ஸா்களை விளாசினாா். ஆனால் அடுத்த ஓவரை வீசிய பும்ரா 4 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தாா்.
இதன்பிறகு அப்துல் ஸமாத் 8 ஓட்டங்களில் நடையைக் கட்ட, ரஷித்கான் டக் அவுட்டானாா். இதனால் கடைசி 2 ஓவா்களில் 21 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. பும்ரா வீசிய 19 ஆவது ஓவரில் விஜய் சங்கா் வெளியேற, ஹைதராபாதின் தோல்வி உறுதியானது. விஜய் சங்கா் 25 பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்தாா். பின்னா் வந்த புவனேஸ்வா் குமாா், கலீல் அஹமது ஆகியோா் தலா 1 ஓட்டத்துடன் வெளியேற, 19.4 ஓவா்களில் 137 ஓட்டங்களுக்கு சுருண்டது ஹைதராபாத்.
மும்பை தரப்பில் ராகுல் சாஹா் 4 ஓவா்களில் 19 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தாா். டிரென்ட் போல்ட் 28 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினாா்.