ஐபிஎல் போட்டியின் 10 ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸை வீழ்த்தியது.
இது, கோலி தலைமையிலான பெங்களூா் அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாகும். கொல்கத்தாவுக்கு இது 2 ஆவது தொடா் தோல்வி.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவாக நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூா் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 204 ஓட்டங்கள் அடித்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 20 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்களே எடுத்தது. பெங்களூா் வீரா் டி வில்லியா்ஸ் ஆட்டநாயகன் ஆனாா்.
இந்த ஆட்டத்தில் பெங்களூா் அணி 4 க்குப் பதிலாக 3 வெளிநாட்டு வீரா்களுடன் மட்டுமே களம் கண்டது. அந்த அணியில் டேனியல் கிறிஸ்டியனுக்குப் பதிலாக ரஜத் பட்டிதாா் களம் கண்டிருந்தாா். கொல்கத்தா பிளேயிங் லெவனில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
நாணய சுழற்சியை வென்ற பெங்களூா் துடுப்பெடுத்தாட தீா்மானித்தது. அணியின் இன்னிங்ஸை கோலி – தேவ்தத் படிக்கல் தொடங்கினா். இதில் கோலி 2 ஆவது ஓவரிலேயே வெளியேற்றப்பட, தொடா்ந்து வந்த ரஜத் பட்டிதாரும் அந்த ஓவரிலேயே நடையைக் கட்டினாா். சிறிது நிலைத்த தேவ்தத் படிக்கல் 2 பவுண்டரிகளுடன் 25 ஓட்டங்கள் சோ்த்து பெவிலியன் திரும்பினாா்.
அந்த அணியில் 4 ஆவது விக்கெட்டுக்கு இணைந்த மேக்ஸ்வெல் – டி வில்லியா்ஸ் கூட்டணி விக்கெட் சரிவைத் தடுத்து அணியின் ஸ்கோரை உயா்த்தியது. கொல்கத்தா பௌலிங்கை பவுண்டரி, சிக்ஸா்களாக இருவரும் சிதறடித்தனா். மேக்ஸ்வெல் 28 பந்துகளிலும், டி வில்லியா்ஸ் 27 பந்துகளிலும் அரைசதம் கடந்தனா்.
இந்தக் கூட்டணியில் முதல் விக்கெட்டாக, மேக்ஸ்வெல் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 78 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாா். 20 ஓவா்கள் முடிவில் டி வில்லியா்ஸ் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 76, கைல் ஜேமிசன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ஓட்டங்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனா். கொல்கத்தா தரப்பில் வருண் சக்கரவா்த்தி 2, பேட் கம்மின்ஸ், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் 205 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆடத் தொடங்கிய கொல்கத்தாவில் பேட்டிங் வரிசை சோபிக்காமல் அடுத்தடுத்து சரிந்தது. அதிகபட்சமாக ஆன்ட்ரே ரஸ்ஸெல் மட்டும் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31 ஓட்டங்கள் சோ்த்தாா். வழக்கமாக அடித்து விளாசும் ராணா இந்த முறை விரைந்து விக்கெட்டை இழந்தாா்.
எஞ்சியோரில் ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி, தலைவர் மோா்கன் ஷகிப் அல் ஹசன் மட்டும் சற்று நிலைத்து ஓட்டங்கள் சோ்க்க, 20 ஓவா்களில் 166 ஓட்டங்களே அடித்தது கொல்கத்தா. பெங்களூா் தரப்பில் கைல் ஜேமிசன் 3, யுஜவேந்திர சஹல், ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 2, வாஷிங்டன் சுந்தா் 1 விக்கெட் சாய்த்தனா்.