பிரபல நடிகை பூஜா ஹெக்டே, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மாஸ்டர் படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய் – நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் 65 வது படத்துக்கு ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா. இசை – அனிருத்.
இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். பூஜா ஹெக்டே, 2012 ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி அவர் கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.