நடிகை சுனைனாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
2008 இல் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார் சுனைனா. 2019 இல் இவர் நடித்த சில்லுக்கருப்பட்டி படம் வெளிவந்தது.
இந்நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் சுனைனா. இதுபற்றி அவர் கூறியதாவது:
பாதுகாப்பாக இருந்தும்கூட கொரோனா வைரஸ் தொற்று எனக்கு உறுதியாகியுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு எல்லா பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறேன், என் குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாருடனும் நான் தொடர்பில் இல்லை. என் குடும்பத்தினர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
எனக்கு இப்போது ஓய்வு தேவைப்பட்டாலும் உதவி தேவைப்படுபவர்களுக்காக சமூகவலைத்தளங்களில் நான் தொடர்ந்து இயங்குவேன். அனைவரும் முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என்றார்.