தமன்னா நடிப்பில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படமும் ‘பாகுபலி’ படமும் வெளிவந்தது. இப்படத்தில் தமன்னாவின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. தற்போது இவர் ‘பாகுபலி 2’, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிவரும் ‘தோழா’ படத்திலும் நடித்து வருகிறார்.
இவர் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘புரூஸ்லீ’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இதை தமன்னா மறுத்துள்ளார். இதைப்பற்றி அவர் கூறும்போது, ‘ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘புரூஸ்லீ’ படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்காக யாரும் என்னை அணுகவில்லை. ஆதலால் இப்படம் குறித்து வெளிவரும் செய்தி பொய்யானது’ என்றார்.
‘புரூஸ் லீ’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து அவரே இசையமைக்கவுள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியானது. ஆக்ஷன் கலந்த திரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.