விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் டிரைலர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதில் டீசர் மற்றும் டிரைலர்கள் யூடியூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. தற்போது இதன் டிரைலர் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.
இதுவரைக்கும் ‘புலி’ டிரைலரை 61 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இது ஒரு சாதனையாக இருந்தாலும் இதனை 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இது இந்திய சினிமா உலகில் பெரிய சாதனையாக கூறப்படுகிறது. இதுவரை பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த ‘கிக்’ படம்தான் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருந்தது. தற்போது ‘புலி’ படத்தின் டிரைலர் அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.
‘புலி’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நான் ஈ சுதிப், ஸ்ரீதேவி, நந்திதா உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சிம்பு தேவன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.