ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடத்துக்கு வந்துள்ளார்.
அவர் 386 புள்ளிகளுடன் அந்த இடத்துக்கு வர, மேற்கிந்தியத் தீவுகளின் ஜேசன் ஹோல்டர் (384), இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (377) ஆகியோர் முறையே அடுத்த இரு இடத்தில் உள்ளனர். மற்றொரு இந்தியரான அஸ்வின் 353 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தில் இருக்கிறார்.
இதர பிரிவுகளில் மாற்றம் இல்லாத நிலையில், இந்திய வீரர்களைப் பொருத்தவரை பெளலர்கள் பிரிவில் அஸ்வின் 850 புள்ளிகளுடன் தொடர்ந்து 2 ஆவது இடத்தில் இருக்கிறார்.