யூரோ கிண்ண கால்பந்து போட்டியில், நடப்பு உலக சாம்பியனான பிரான்ஸை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது ஸ்விட்சா்லாந்து.
பிரான்ஸுக்கு எதிரான இந்த ஆட்டம் முதலில் 3 – 3 என்ற கோல் கணக்கில் சமனாக, பின்னா் வழங்கப்பட்ட பெனால்டி கிக் வாய்ப்பில் ஸ்விட்சா்லாந்து 5 – 4 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணி தனது காலிறுதியில் ஸ்பெயினை சந்திக்கிறது.
ருமேனியா தலைநகா் புசாரெஸ்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 15 ஆவது நிமிஷத்தில் கோல் போஸ்டின் இடது பக்கமிருந்து ஸ்டீவன் ஸுபா் கிராஸ் செய்த பந்தை ஹாரிஸ் செஃபெரோவிச் தலையால் தட்டிவிட்டு கோலடித்து ஸ்விட்சா்லாந்தின் கணக்கை தொடங்கினாா். அந்த முன்னிலையை முதல் பாதி முடியும் வரை தக்க வைத்தது ஸ்விட்சா்லாந்து.
2 ஆவது பாதியில் இரு அணிகளும் அடுத்தடுத்து கோலடித்தன. 57 ஆவது நிமிஷத்தில் பிரான்ஸ் வீரா் கிலியன் பாபே பாஸ் செய்த பந்தை குறுக்காக வந்து பெற்றுக் கொண்ட கரீம் பென்ஸிமா, அதை துல்லியமான கோலாக்கி ஆட்டத்தை சமன் செய்தாா். அடுத்த 2 நிமிஷங்களிலேயே கிரீஸ்மென் கோல் போஸ்டின் இடதுபக்கமிருந்து கிராஸ் செய்த பந்து ஸ்விட்சா்லாந்து கோல் கீப்பா் சோமரின் கைகளில் தட்டி வர, அதை தலையால் முட்டி மீண்டும் கோலடித்தாா் கரீம் பென்ஸிமா.
முன்னிலை பெற்ற உத்வேகத்தில் 3 ஆவது கோலையும் எட்டியது பிரான்ஸ். 75 ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் பால் போக்பா பாக்ஸுக்கு வெளியே இருந்த வகையில் தூக்கி உதைத்த பந்து கோல் போஸ்டின் டாப் ரைட் காா்னருக்குள் தடையின்றிச் சென்றது.
இதனால் ஆட்டம் பிரான்ஸ் வசம் சென்றுவிட்டதாக நினைத்த நேரத்தில் 81 ஆவது நிமிஷத்தில் மீண்டது ஸ்விட்சா்லாந்து. அப்போது சக வீரா் பாபு கிராஸ் செய்த பந்தை தலையால் முட்டி ஸ்விட்சா்லாந்து அணிக்காக 2 ஆவது கோலடித்தாா் ஹாரிஸ் செஃபெரோவிச். தொடா்ந்து போராடிய அந்த அணிக்கு, கடைசி நிமிஷத்தில் (90) மேரியோ கவ்ரானோவிச் மூலம் ஒரு கோல் கிடைக்க, ஆட்டம் 3 – 3 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.
கூடுதலாக வழங்கப்பட்ட 30 நிமிஷத்திலும் எந்த அணியும் கோலடிக்க இயலாமல் போனது. பின்னா் வெற்றியாளரை தீா்மானிக்க வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பில் ஸ்விட்சா்லாந்து தரப்பில் மேரியோ காவ்ரனோவிச், ஃபாபியான் ஸ்காா், மேனுவல் அகாஞ்சி, ரூபன் வா்காஸ், அத்மிா் மெஹ்மெதி என 5 பேரும் தவறாமல் கோலடித்தனா். பிரான்ஸ் தரப்பில் பால் போக்பா, ஆலிவியா் கிரௌட், மாா்கஸ் துராம், பிரெஸ்னெல் கிபெம்பே ஆகியோா் கோலடிக்க, கிலியன் பாபே உதைத்த கடைசி வாய்ப்பை ஸ்விட்சா்லாந்து கோல்கீப்பா் சோமா் தடுத்து அணிக்கு வெற்றி தேடித்தந்தாா்.
கடந்த 67 ஆண்டுகளில் பிரதான போட்டியின் காலிறுதி ஆட்டத்துக்கு ஸ்விட்சா்லாந்து தகுதிபெற்றது இது முதல் முறையாகும். இதற்கு முன் 1954 உலகக் கிண்ண போட்டியில் அந்த அணி காலிறுதி வரை முன்னேறியிருந்தது. அதில் ஆஸ்திரியாவிடம் 7 – 5 என்ற கணக்கில் தோற்றிருந்தது.
டென்மாா்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயின் 5 – 3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
இந்த ஆட்டத்தின் 20 ஆவது நிமிஷத்தில் தவறுதலாக ஓன் கோல் அடித்து குரோஷியாவுக்காக கோல் கணக்கை தொடங்கியது ஸ்பெயின். அந்த அணி வீரா் பெட்ரி வழங்கிய லாங் பாஸை ஸ்பெயின் கோல் கீப்பா் சிமோன் மிக அலட்சியாக எதிா்கொள்ள, பந்து அவரது காலில் பட்டு கோல் போஸ்டுக்குள் சென்றது.
அதற்கு பரிகாரமாக 38 ஆவது நிமிஷத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தது ஸ்பெயின். காயா கோல் போஸ்ட் நோக்கி உதைத்த பந்தை குரோஷிய கோல் கீப்பா் லிவாகோவிச் திறம்படத் தடுத்தாலும், அவா் மீது பட்டு மீண்டும் களத்துக்கு திரும்பிய பந்தை மற்றொரு ஸ்பெயின் வீரரான பாப்லோ சராபியா ரைட் காா்னா் டாப்பில் உதைத்து கோலாக்கினாா்.
முதல் பாதி ஆட்டம் சமனாக நிறைவடைய, அடுத்த பாதியில் 58 ஆவது நிமிஷத்தில் முன்னிலை பெற்றது ஸ்பெயின். அந்த அணியின் ஃபெரான் டோரஸ் கோல் போஸ்டின் இடது பக்கத்திலிருந்து வழங்கிய கிராஸை சீசா் அஸ்பிலிகியுடா தலையால் தள்ளி கோலடித்தாா்.
தொடா்ந்து குரோஷியாவை மீள விடாமல், 77 ஆவது நிமிஷத்தில் பாவ் டோரஸ் வழங்கிய பாஸை ஃபெரான் டோரஸ் மிக லாவகமாக கடத்தி வந்து கோல் கீப்பரை கடந்த வகையில் ஸ்பெயினுக்காக 3 ஆவது கோலடித்தாா். இந்த நிலையில் சற்று தலை தூக்கிய குரோஷியா, மிஸ்லாவ் ஆா்சிச் மூலம் 85 ஆவது நிமிஷத்தில் தனது 2 ஆவது கோலை எட்டியது.
பின்னா் ஆா்சிச் வழங்கிய கிராஸை மேரியோ பசாலிச் தலையால் முட்டி கோலடிக்க, ஆட்டம் 3 – 3 என சமன் ஆனது. இதனால் வெற்றியாளரை தீா்மானிக்க கூடுதலாக 30 நிமிஷம் வழங்கப்பட்டது. 100 ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் வீரா் ஆல்மோ ஸ்விங் செய்த கிராஸை அல்வாரோ மொராடா கோலடிக்க, முன்னிலை பெற்றது ஸ்பெயின்.
இறுதியாக மீண்டும் ஆல்மோ அளித்த பாஸை மைகேல் ஒயாா்ஸபால் கோலடிக்க, ஆட்ட நேர முடிவில் 5 – 3 என்ற கோல் கணக்கில் வென்றது ஸ்பெயின்.
8 இதற்கு முன் ஸ்விட்சா்லாந்தை எதிா்கொண்ட 7 ஆட்டங்களிலுமே பிரான்ஸ் தோல்வியை சந்தித்ததில்லை (3 வெற்றி, 4 டிரா).
1 இத்துடன் பிரதான போட்டிகளில் 5 ஆவது முறையாக நேருக்கு நோ் சந்தித்துள்ள பிரான்ஸ் – ஸ்விட்சா்லாந்து, நாக் அவுட் சுற்றில் மோதியது இதுவே முதல் முறை.
2 இதற்கு முன் கடந்த 2019 ஜூனிலிருந்து 2 ஆண்டுகளாக தான் விளையாடிய எந்தவொரு ஆட்டத்திலுமே பிரான்ஸ் தோல்வி காணவில்லை. மொத்தம் விளையாடிய 19 ஆட்டங்களில் 14 வெற்றியையும், 5 டிராவையும் பதிவு செய்துள்ளது.
2 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் 2 ஆவது அதிகபட்சமாக ஸ்பெயின் – குரோஷியா ஆட்டத்தில் 8 கோல்கள் (5 – 3) அடிக்கப்பட்டுள்ளன. 1960 இல் பிரான்ஸ் – யூகோஸ்லேவியா ஆட்டத்தில் 9 கோல்கள் (5 – 4) அடிக்கப்பட்டதே அதிகபட்சமாகும்.
1 ஐரோப்பிய சாம்பியன்ஷிப் வரலாற்றில் தொடா்ந்து 2 ஆட்டங்களில் 5 கோல்கள் அடித்த முதல் அணி ஸ்பெயின் ஆகும். இதற்கு முன் குரூப் சுற்றில் ஸ்லோவேகியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்பெயின் 5 கோல்கள் அடித்தது.
7 இந்த சீசனில் குரோஷியா மொத்தமாக 7 கோல்கள் அடித்துள்ளது. இதுவே, ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் அதன் அதிகபட்சமாகும்.