உலகளவில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 12,007,732 பேராக உள்ளனர். இதுவரை 17.19 கோடிப் பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
உலகளவில் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,055,479 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 கோடியே 80 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 171,985,738 பேர் குணமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் இதுவரை 188,048,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து 171,985,738 பேர் மீண்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 12,007,732 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 78,554 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை கோர தாண்டவம் ஆடிய நிலையில், பெரும்பாலான நாடுகள் தற்போது தொற்றிலிருந்து மெல்ல மீண்டு வருகிறது. தொற்று பாதிப்பைத் தடுக்க அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,766,404 ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 623,029 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,904,734 ஆக உள்ள நிலையில், பலி எண்ணிக்கை 409,338 ஆக உள்ளது.
இதேபோல் பிரேசில், பிரான்ஸ், துருக்கி, இத்தாலி, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பாதிப்பும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.