சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியிடப்படுகிறது.
தாணு தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்கிற படத்தை இயக்குகிறார் வெற்றிமாறன். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் நாளை வெளியிடப்படுவதாகத் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
வாடிவாசல் பற்றிய அறிவிப்பிற்காக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழ் நெஞ்சங்களுக்கு நல்விருந்தாய், வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை இன்று மாலை 5:30’க்கு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.