பிரபல வீடியோ வலைதலமான யூ-டியூபில் சவுதியில் உள்ள மெக்கா மசூதியின் விரிவாக்கப் பணியில் ஈடுபட்டு வரும் இந்திய தொழிலாளர் ஒருவரை என்ஜினியர் ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
தேதியிடப்படாத இந்த வீடியோ கனடாவைச் சேர்ந்த நிருபர் ஒருவரால் பேஸ்புக்கில் பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டுள்ள சவுதியின் தொழிலாளர் அமைச்சகம், இந்திய தொழிலாலரை தாக்கியவர் சவுதியை சேர்ந்த என்ஜினியர் இல்லை என்றும் அவர் எகிப்து நாட்டை சேர்ந்தவர் என்றும் பதிலளித்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் விரைந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.