உடல்நலக்குறைவு காரணமாக பழம்பெரும் நடிகை ஜெயந்தி பெங்களூருவில் இன்று காலமானார்.
மிஸ் லீலாவதி திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஜெயந்தி. இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், வெள்ளி விழா உட்பட ஏராளமான தமிழ்ப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஜெயந்தி.
மறைந்த மூத்த நடிகர்கள் ஜெமினி கணேசன், எம்ஜிஆர் உள்பட பல நடிகர்களுடனும் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த ஜெயந்தி சினிமாவை விட்டு விலகியிருந்தார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் இன்று அவர் மரணமடைந்துள்ளார். இத்தகவலை அவரின் மகன் கிருஷ்ண குமார் உறுதி செய்துள்ளார்.
ஜெயந்திக்கு வயது 76. இதையடுத்து அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.