2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிருக்கான 10 மீட்டர் குறிப்பார்த்து சூடும் போட்டியில் சீனா தங்கப் பதக்கம் வென்றது.
இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
இதேவேளை, பதக்கப் பட்டியலின் தற்போதைய நிலவரப்படி ஜப்பான் 8 தங்கம், 2 வௌ்ளி, 3 வெண்கலம் அடங்கலாக 13 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்கா 7 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் அடங்கலாக 15 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், சீனா 6 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் அடங்கலாக 18 பதக்கங்களைப் பெற்று 3 வது இடத்திலும் இருக்கின்றது.