உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டா்களில் ஒருவரான நியூஸி. வீரா் கிறிஸ் கெயின்ஸ் (51) பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டாா்.
நியூஸிலாந்து அணியில் இடம் பெற்று ஆடிய கிறிஸ் கெயின்ஸ்க்கு கடந்த மாதம் இருதய பாதிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து சிட்னி நகரில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவருக்கு அப்போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், கால்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டன.
கடந்த 1989 முதல் 2006 வரை 62 டெஸ்ட், 215 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் ஆடியுள்ளாா் கெயின்ஸ் . 2000 ஆம் ஆண்டில் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரா் விருதையும் பெற்றாா் அவா். கிறிஸ் கெயின்ஸின் உடல்நிலை திடமாக உள்ளதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா்.