விஜய் தொலைக்காட்சியில் விரைவில் பிக்பாஸ் 5வது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. வரும் அக்டோபர் மாத இறுதியில் இருந்து நிகழ்ச்சி ஆரம்பமாகும் என்று தகவல்கள் கசிகின்றன.
புரொமோ, நிகழ்ச்சி செட் என எல்லாமே ரெடி, தொலைக்காட்சியில் ஆரம்பமாக வேண்டியது தான் மீதம் இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறவர்கள் பற்றிய பேச்சு தான் மக்களிடம் உள்ளது. நிறைய பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகின்றன.
இப்போது யார் பெயர் என்றால் சின்னதம்பி சீரியலில் நடித்து மக்களிடம் பிரபலமான நடிகை பவானி ரெட்டி பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள போவதாக சில தகவல்கள் கசிகின்றன.