இயக்குனர் சங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய திரைப்படம் ´காதல்´. இப்படம் 2004-ல் வெளியானது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தப் படம் பல விருதுகளையும் வென்றது. இதில் பரத் மற்றும் சந்தியா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
´காதல்´ படத்தில் பரத்தின் உதவியாளர் கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரமாக அருண்குமார் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. பின்னர் விஜய்யின் ´சிவகாசி´ உள்ளிட்ட சில படங்களிலும் அருண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
சில வருடங்களாக ஒரு பெண்ணை அருண் காதலித்து வந்துள்ளார். தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. இவர்களின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.