பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிக பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியாக தான் இருக்க முடியும்.
மேலும் இதன் அடுத்த சீசனான பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்க உள்ளது, இதில் எந்தெந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழை போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலம், தெலுங்கில் நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் 5 தெலுங்கு இன்று 6 மணி முதல் கோலாகலமாக தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.