சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அனைத்தும் முடித்து வெளியீட்டிற்கு தயாராகவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து ரஜினி இளம் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்த ஒரு அரிதான புகைப்படம் வெளியானாலும் அது அவரின் ரசிகர்களிடையே பரவி வரும்.
அந்த வகையில் தற்போது ரஜினி அவரின் இளம் வயதில் நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட அரிதான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.