பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனாக நடித்து வருபவர் அருண் பிரசாத். இவர் முதலில் சீரியல் கதாபாத்திரத்தால் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
பின் அவரது கதாபாத்திரம் டிராக் மாற ரசிகர்கள் அவரை வெறுத்து வருகிறார்கள். சாதாரண குடும்பத்தில் பிறந்த அருண் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துள்ளார்.
அதன்பிறகு நிறைய மாடலிங் துறையில் பணியாற்றியிருக்கிறார். அப்போது அவருக்கு மேயாத மான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதில் நடித்துள்ளார்.
அப்படத்திற்கு பிறகு அருணுக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த சீரியலுக்காக அருண் ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம் பெற்று வருகிறாராம்.