நடிகர் சரத்குமார் – நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரேயானுக்கும், கிரிக்கெட் விளையாட்டு வீரர் அபிமன்யூ மிதுனுக்கும் இரு வீட்டாரும் திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர்.
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பிரபு, ராம்குமார், ராதாரவி, பாக்யராஜ், மோகன், மோகன்ராம். அரவிந்த்சாமி, சாந்தனு, அருண் விஜய், பிரசன்னா, ராம்கி, சிவகுமார், பிரித்வி, ஜித்தன் ரமேஷ், மிதுன் ஆகியோரும், இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், சமுத்திரகனி, பாலாஜி மோகன், ஹரி, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, ஆர்.பி.சௌத்ரி, டி.ஜி.தியாகராஜன், அன்பு செழியன், டி.சிவா, ராம் வாசு, லிஸ்டின் ஸ்டிபன், சுஜாதா விஜயகுமார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
நடிகைகள் ஸ்ரீப்ரியா, அம்பிகா, மீனா, நளினி, சீமா, சரிதா, ஜோதிகா, சீதா, வடிவுக்கரசி, நிரோஷா, குஷ்பூ, சங்கீதா விஜய், மகேஸ்வரி சத்யராஜ், காயத்திரி ரகுராம், ஷோபா சந்திரசேகர், கற்பகம், ப்ரீதா ஹரி, லிசி, விஜி, ஜெயபிரபா, சுஹாசினி, சரண்யா பாக்யராஜ், ஆர்த்தி ஜெயம் ரவி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ரேயான்-அபிமன்யூ மிதுன் திருமண நிச்சயதார்த்தத்திற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.