சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சூர்யா – ஜோதிகா இணைந்து 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்த ஜெய் பீம், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன் பிறப்பே, ஓ மை டாக் ஆகிய 4 படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த மாதம் ராமே ஆண்டாலும் ராவேணே ஆண்டாலும் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதனையடுத்து சசிக்குமார், ஜோதிகா இணைந்து நடித்துள்ள உடன் பிறப்பே திரைப்படம் வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் இன்று வெளியாகியுள்ள மற்றொரு அறிவிப்பில் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படமும், சிம்புவின் மாநாடு திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதால், மூன்று படங்களுக்கும் வசூல் ரீதியிலான போட்டி உருவாகாவிட்டாலும், விமரிசன ரீதியான போட்டி உருவாகும் என்று கூறப்படுகிறது.