நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா. தொடர்ந்து ரஜினிகாந்த்துடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் , தனுஷுடன் குட்டி, திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ள நராகசுரன் படம் கடந்த சில வருடங்களாக பொருளாதரா சிக்கல் காரணமாக திரைக்குவராமல் இருக்கிறது. இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை முதன்முறையாக அறிவித்துள்ளார்.
கர்ப்பமாக இருந்ததை அவர் அறிவிக்காததால் இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறத்து அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், ”எங்களுக்கு 2020 கரோனா ஊரடங்கு மகிழ்ச்சிகரமான காலகட்டமாக அமைந்தது. எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கடவுளுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.